Tuesday, December 29, 2009

என் முதல் வெளிநாட்டு (சிங்கப்பூர்) விமான பயண அனுபவம் !!!
நான் நீண்ட காலமாக படத்திலும் நண்பர்கள் கூறியும் தான் சவூதி கேள்வி பட்டு இருந்தேன், நிஜத்திலேயே செல்லும் வாய்ப்பு கிடைத்தவுடன் சந்தோசமாகவும் இருந்தது அதே சமயம் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஏனென்றால் இது தான் முதல் வெளிநாட்டு பயணம், எப்படி போவது அங்கே யாரை கேட்டு போகணும், டாக்ஸி எப்படி பிடிப்பது கன்சல்டன்சி விலாசத்தை எப்படி கண்டு பிடிப்பது போன்ற சந்தேகங்களும் கூடவே பயமும் இருந்தது.
வீட்டில் அனைவரும் சென்னை விமான நிலையம் வந்து இருந்தார்கள். எனக்கு நேரம் ஆக ஆக படபடப்பு அதிகமாகி விட்டது, இருந்தாலும் அதை வெளி காட்டிக்கொள்ளாமல் (நாம யாரு :D) சிரித்துக்கொண்டு !!! இருந்தேன். உள்ளே அனுமதித்ததும் எல்லோரும் சிறப்பு சீட்டு எடுத்து உள்ளே வந்து இருந்தார்கள். முன் பரிசோதனை முடிந்து போர்டிங் பாஸ் கொடுத்தவுடன் இமிக்ரேசன் செல்லும் முன்பு திரும்ப வந்து அனைவரையும் பார்க்க வந்தேன், நான் ஹாஸ்டலில் மற்றும் சென்னையில் சேர்த்து 18 வருடங்கள் என் அம்மாவை பிரிந்து இருந்தாலும், இந்த பிரிவு என்னை என்னவோ செய்தது. அது வரை அமைதியாக இருந்த என் அம்மா நான் கிளம்புகிறேன் என்று சொன்னதும் எவ்வளோ கட்டுப்படுத்தியும் முடியாமல் அழுது விட்டார்கள். அது வரை தைரியமாக!! கட்டுப்படுத்தி இருந்த நான் எவ்வளோ முயற்சி செய்தும் என் அம்மாவின் கண்களில் கண்ணீரை கண்டதும் எனக்கும் அழுகை வந்து விட்டது பிரிவு தாங்காமல் அல்லது என் அம்மாவின் முகத்தை கண்டதும். அதற்கு மேல் அங்கே நின்றால் அம்மாவுக்கும் சிரமம் எனக்கும் என்னை கட்டுப்படுத்த முடியாது என்று வேகமாக அனைவரிடமும் சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டேன். என்ன தான் சொல்லுங்க எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத அம்மாவின் உண்மையான அன்புக்கு ஈடு இணை இல்லைங்க. நான் கடைசி பய்யன் என்பதால் என் மீது கொஞ்சம் பாசம் அதிகம். எனக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்று இருந்தாலும் என் அம்மாவுக்கு நான் இன்னும் ரொம்ப சின்ன பய்யன் தான்.
பிறகு அனைவரிடமும் பிரியா விடை பெற்று இமிக்ரேசன் சோதனை முடிந்து மேலே வந்தால் உள்ளூர் தொலைபேசி இருந்தது திரும்ப அதில் இருந்து ஒருமுறை அனைவரிடமும் பேசி விட்டு !!! பாதுகாப்பு சோதனை முடிந்து உட்கார்ந்து இருந்தேன். எப்படி போவது? யாரை பார்ப்பது? எளிதாக விலாசத்தை கண்டு பிடித்து விடலாமா? சவூதிசென்றால் அங்கே என்ன கேள்வி கேட்பார்கள்? போன்ற யோசனைகளுடன் காத்து கொண்டு இருந்தேன்.
விமானத்தில் சென்று அமர அறிவிப்பு வெளியிட்டார்கள். நானும் ஒரு பயத்துடனே சென்றேன், தனியாக வேறு செல்கிறோம், முதல் முறை வேறு என்பதால் கொஞ்சம் ஒரு மாதிரியாக தான் இருந்தது. விமானத்தின் உள்ளே செல்லும் முன்பு பயண சீட்டு மற்றும் பாஸ்போர்ட்டை சோதனை செய்தார்கள், பிறகு உள்ளே போகும் முன்பு இன்றைய காலை பத்திரிக்கைகள் அனைத்தையும் வைத்து இருந்தார்கள், அதில் நம்ம தந்தியையும், தினகரனையும் எடுத்துக்கொண்டு உள்ளே சென்றேன். எனக்கு ஹிந்து எல்லாம் படம் பார்க்க தான் தெரியும் ஹீ ஹீ ஹி. விமான பணிப்பெண்கள் ;) நான் அமரும் இடத்திற்கு செல்ல உதவினார்கள் (பணிப்பெண் சூப்பர்ங்க=P~ ), இந்த பெண்களை பார்த்தவுடன் கொஞ்சம் கூல் ஆகி விட்டேன் ஹீ ஹீ ஹீ.
நான் பயணிகள் அனைவரும் வெளிநாட்டினராக இருப்பார்கள் என்று பார்த்தால், ஒரு கோயம்பேடு KPN டிராவல்ஸ் ல் இருப்பது போன்ற உணர்வு. அத்தனையும் நம்ம மக்கள். என்னடா! இது வெளிநாடு போற உணர்வே இல்லையேன்னு நொந்துட்டு கம்முனு உட்கார்ந்தேன். இதுல கூலி தொழிலாளர்களும் இருந்ததால் ஒரே காச் மூச்னு சத்தம். எனக்கு சுத்தமாக விமானத்தில் செல்லும் ஆசையே போய் விட்டது, நான் கற்பனை செய்து வைத்து இருந்ததற்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாதது தான் காரணம். என் அருகில் இருந்தவர் எதோ ஒரு சட்டையை பேருக்கு மாட்டி வந்தது போல் உட்கார்ந்து, பேருந்தில் காலை வைப்பது போல் வைத்து உட்கார்ந்து கொண்டார், எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது (புதிது என்பதால் தான் அதற்கு பிறகு இதெல்லாம் சகஜம் என்று உணர்ந்து கொண்டேன் :D என்னுடைய நினைப்பு என்னவென்றால் விமானத்தில் பயணம் செய்பவர்கள் மிகவும் நாகரீகமாக நடந்து கொள்வார்கள் என்று. அது எவ்வளோ பெரிய தவறு என்று என்று அதன் பிறகு எனக்கு ஏற்பட்ட பயணங்களில் அறிந்து கொண்டேன்.
விமானம் புறப்படபோவதாக அறிவித்தார்கள் எனக்கு என் முந்தய உள்நாட்டு விமான பயண அனுபவம் வந்து பயமுறுத்தியது. பெல்ட்டை இறுக்கமாக கட்டி கொண்டேன். ஆனால் அந்த பயணம் போல் இல்லாமல் எந்த ஒரு வித்யாசமும் தெரியாமல் மேலே கிளம்பியது. கீழே இருந்தே விமானத்தை பார்த்து பழகிய எனக்கு, விமானத்தில் இருந்து சென்னையை பார்த்தது ஒரு புது அனுபவமாக இருந்தது. பணிப்பெண்கள் சிறிது நேரத்திலேயே குடிப்பதற்கு ட்ரிங்க்ஸ் கொடுத்தார்கள். என் அருகில் அமர்ந்து இருந்தவரை பார்த்தேன் அதற்குள் தூங்கி இருந்தார் நிறைய முறை வந்திருப்பவர் போல இருக்கு :)) . என் முன்னால் இருந்த மானிடரில் தமிழ் படமும் இருந்தது. உன்னாலே உன்னாலே படம் இருந்தது சரின்னு அதை போட்டேன், எப்படி கேட்பது என்று தெரியவில்லை. ஹெட் போன் இருந்தாலும் அதை எங்கே மாட்டுவது என்று தெரியவில்லை, கொஞ்ச நேரம் ஊமை படமாகவே பார்த்து கொண்டு இருந்தேன், பிறகு சீட்டை சாய்க்கலாம் என்று பார்த்தால் கை பிடி அருகே ஹெட் போன் ஐ சொருகும் இடம் காணப்பட்டது. அட! இதை அவர்களிடம் கேட்டு இருக்கலாமே என்று என்னை நானே திட்டி கொண்டு படம் பார்க்க ஆரம்பித்தேன். பிறகு பிரியாணி, ட்ரிங்க்ஸ் மற்றும் உற்சாக பானங்கள் (அட சரக்குங்க) கொடுத்தார்கள், எனக்கு சிங்கப்பூர் சென்று அங்கே என்ன செய்ய போகிறோம் என்ற கவலையும் யோசனையும் அதிகமாக இருந்ததால் எதையும் சாப்பிட பிடிக்கவில்லை, பீர் கூட சப்பிடலைனா பார்த்துக்குங்க :D சரி அங்கே போய் சாப்பிட என்ன கிடைக்குமோ இங்கேயே எதாவது சாப்பிடுவோம் என்று சாப்பாடை வேண்டா வெறுப்பாக சாப்பிட்டேன். என்னருகில் இருந்தவர் புல் கட்டு கட்டினார். அதை பார்த்ததுமே எனக்கு பசி போய் விட்டது. பெயர் தெரியாத சரக்கு இரண்டு பாட்டில் உள்ளே தள்ளினார், எனக்கு வேற பயம் எங்கேயாவது நம்ம மேல வாந்தி எதுவும் எடுத்து வைத்து விடுவாரோன்னு. இங்கே ஜன்னல் வெளியே அவசரத்துக்கு தலைய கூட நீட்ட முடியாதே :-SS . பிறகு சவூதில் என்ன செய்ய போகிறோம் போனவுடன் என்று யோசனை செய்து கொண்டு இருந்ததில் என்னை மறந்து அப்படியே தூங்கி விட்டேன். பிறகு திடீரென்று பணிப்பெண் "ஹெல்ப் ஹெல்ப் எமர்ஜென்சி எமர்ஜென்சி" ன்னு அலறுச்சு பாருங்க!! எனக்கு தூக்கம் எல்லாம் கலைந்து பயத்தில் முகம் எல்லாம் வெளிறி போய் விட்டது.
இதன் தொடர்ச்சியை அடுத்த பாகத்தில் கூறுகிறேன்

Monday, December 28, 2009


I.JEYARAJ

நானும் சுய தொழில் செய்கின்றேன் அதுவும் தனியாக பெற்றவர்களோ அல்லது மற்றவர்களின் எந்த வித பண உதவியோ அல்லது பின் புலமோ இல்லாது சுய தொழில் செய்கின்றேன் என்ற ஒரு நம்பிக்கையில் சுய தொழில் செய்யலாம் என எத்தனிக்கும் அனைவருக்கும் எனது புரிதலையும் அறிதலையும் பதிகிறேன்.........

சுய தொழில் என்றால் டாடா , பிர்லா, அம்பானி எனும் 'மிகைப்படுத்தல் திரையை" முதலில் கிழித்து எரிந்திட வேண்டும்.

நமது தெருவில் தினந்தோறும் காலையில் பேப்பர் போடும் சிறுவன்,இணைய தொடர்பு நிலையும் வைத்திருக்கும் நண்பர்கள்,ஜெராக்ஸ் கடை,தொலை பேசி நிலையம் வைத்திருக்கும் நண்பர்கள்,சிறிய ஓட்டல் கடை நடத்தும் இளையர்களில் இருந்து அனைவருமே சுய தொழில் அதிபர்கள் தான்.

மிகவும் வருத்தப்படக்கூடிய ஆனால் உண்மையான் விஷயம் என்னவென்றால் இவர்களை எல்லாம் தொழிலதிபர்களாக எண்ண முடிகிறது இல்லை,நம்மில் பலருக்கு,

சுய தொழில் என்றாலே பல லட்சங்களை வங்கியிலிருந்து கடன் பெற்று கொண்டு பின் மிக பெரிய பல தொழில் செய்பவர்கள் மட்டும் தான் என்ற நமது அனைவரின் எண்ணங்களிலும் சிறு மாற்றம் வேண்டும்.

எனது புரிதல்........!!!!
சுய தொழில் செய்வதற்கு,படிப்பு தேவை இல்லை.

நான் இவ்வாறு சொல்வதனால் படிப்பே தேவை இல்லை என்று அர்த்தம் இல்லை,படிப்பு தான் முக்கியம் என்று நினைத்தல் வேண்டாம்.

புத்தகபடிப்பு நல்ல மேலாளர்களை உருவாக்குகிறது
வாழ்க்கை படிப்பு நல்ல முதலாளிகளை உருவாக்குகிறது.


நன்றாக MBA படித்தால் நான் MBA வாக்கும் என்ற தன்முனைப்பே நமக்கு தடையாகும்
ஆனால் படிப்பறிவில்லாது நாம் கேக்கும் பல சிறுபிள்ளைத்தனமான கேள்விகள் நம்மை விரைவில் நம்மை, நம்மின் அறியாமையில் இருந்து வெளிக்கொணரும்.

ENTREPRENEURS என்று சொல்லுபவர்கள் பல நேரங்களில் "THINK OUT OF THE BOX" என்று சொல்லக்கூடிய வாழ்வியல் முறையை தனதாக்கிகொண்டவர்கள்

பள்ளிக்கூடங்களில் ஒரே முறையான பயிற்ச்சி அனைவருக்கும் தரப்படுகிறது ஆனால் வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான படிப்பினையை தருகிறது.

எனவே படிப்பில் முதலீடு செலுத்துவதை விட புரிதலில் தீர்க்கமாக இருங்கள்
அடுத்து முதலீடு,அதுவும் முழுவதுமாக தேவை இல்லை.

தொழில் என்பது மிக முக்கியமாக, வெறும் முதலீடு மட்டும் இல்லை,

அப்படி பார்த்தால் எத்தைனையோ பேர் கையில் காசு வைத்து கொண்டும் தொழில் செய்யாமல் வெறும் வங்கியில் கிடைக்கும் கொசுறு வட்டி பணத்திற்காக மாதம் முதல் தேதிக்கு காத்துக்கொண்டு தான் இருக்கின்றனர்.


சுய தொழில் செய்வதற்கு தேவை காசு மட்டுமே இல்லை,
ஒரு "first generation entrepreneur" = புதியதாக தொழில் தொடங்குபவர்கள் = முதல் தலைமுறை தொழிலதிபர்கள் = எந்த வித தொழில் பின் புலனும் இல்லாதவர்கள், என்பவன் எவ்வாறு சிந்திக்கிறான் அல்லது சிந்திக்க வேண்டும் என்று விளக்குகிறேன்


நம் மீது நமக்கு திடமான நம்பிக்கை, மட்டுமே

நமது கனவை நிஜப்படுத்துவதற்கான கடினமான மன உறுதி,

எந்த விதமான சூழலிலும் நாம் எடுத்துக்கொண்ட முயற்சியில் இருந்து விட்டுக்கொடுத்துவிடாத தன்மை.

மனிதர்களை அவர்களின் உணர்வுகளை புரிதல் மற்றும் அவர்களுக்கும் நமக்கும் உண்டான உறவை வலுப்படுத்தும் நுணுக்கம்.

வாய்ப்புகளை சரியாக கண்டுபிடித்து அதை நமக்கு சார்பாக மாற்றக்கூடிய சாமர்த்தியம்.

பலமாக இருக்கும் நேரத்தில் பலமற்றவனாகவும் பலமற்ற நேரத்தில் பலமுள்ளவனாகவும் காட்டிக்கொள்ளக்கூடிய போர் திறனும்
STREET SMART எனப்படும் எதையும் இலகுவாக அந்த நேரத்தில் அந்த நொடியில் சமாளிக்கக்கூடிய திறமை.......

இது எல்லாவற்றிற்கும் மேலாக அந்த நெருப்பு....!!!!!

முதலில் சிந்தியுங்கள்.......

உங்களிடம் அந்த ஒரு நெருப்பு இருக்கிறதா..... என்று உணருங்கள்.
அவன் செஞ்சான் இவன் செஞ்சான் என்று இல்லாமல்.நம்ம கிட்ட அந்த பொறி இருக்கா அப்படின்னு பாருங்கள்.ஆங்கிலத்தில் PASSION என்று சொல்லுவார்கள்

***நீங்கள் செய்ய எண்ணும் அந்த தொழிலில் உங்களுக்கு PASSION இருக்கின்றதா ..... என்று உணருங்கள்.

நீங்கள் செய்யப்போகும் அந்த தொழிலை நீங்கள் உங்கள் காதலியை போல் நேசிக்க வேண்டும்,
பிடித்த விளையாட்டை போல மகிழ்ச்சி உடன் செய்ய வேண்டும்.

***உங்களுடைய மூளைக்கு புரிய வையுங்கள்..... இது நாள் வரை நீங்கள் வாழ்ந்திட்ட வாழ்க்கைக்கும் இப்பொழுது,ஒரு தொழில் அதிபராய் நீங்கள் தொடர இருக்கும் வாழ்க்கைக்கும் இடையே ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கப்போகிறது என்று,

ஒருவரிடம் வேலை செய்யும் பொழுது இருக்கும் ஒரு தெளிவான நிலை,அதாவது மாசமானா சரியாய் ஏழாம் தேதி சம்பளம்,முதல் தேதியில் இருந்து நீங்கள் திட்டமிட்டபடி நடக்கக்கூடிய பல விஷயங்கள், இனி இராது

இனி வாழ்க்கை உங்களுக்கு ஒவ்வொரு நொடியும் ஒரு புதிராகவே இருக்கும் (UNCERTAINITY) என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே மூளைக்கு இதை புரிய வையுங்கள்.

தோல்விகளை உங்கள் குருநாதராக கருதிக்கொள்ளுங்கள்.
அந்த குருநாதருக்கு குரு தட்சணையாக உங்கள் வெற்றியை காணிக்கை ஆக்குங்கள்.
தீருபாய் அம்பானியே நமக்கு எடுத்துக்காட்டு அவரது மகன்கள் அனிலோ முகேஷோ அல்ல
ஏனெனில் நாமெல்லாம் முதல் தலைமுறை தொழிலதிபர்கள்...எனவே நாம் நமக்கு உதாரண புருஷனை தீருபாய் அம்பாநியையே எடுக்க வேண்டும்.

அப்படி நாம் அவரை எடுத்துக்காட்டாய் எடுத்து வாழ்ந்ததால் நமது பிள்ளைகள் அனிலாகவோ முகேஷாகவோ பிறக்க வாய்ப்புண்டு....
சுய தொழில் செய்ய ஆர்வமாய் உள்ளவர்களை எத்தனை பெற்றோர் ஊக்கப் படுத்துகிறார்கள்? லாபம், நட்டம் என்று மாறி மாறி வரும். நிலையான வருமானம் வராது. என்று சொல்லி ஆர்வத்திற்கு அணை போடுகிறார்கள்.

மன்னிக்கவும் இவை எல்லாம் உண்மையான நிஜங்கள் என்றாலும் இவற்றை உங்கள் பிருஷ்டத்திற்கு பின்புறம் தூக்கி எரிந்து விட்டு உங்கள் கனவை நோக்கி
உங்களை நீங்களே உந்தி செல்லுங்கள்.

உங்கள் கனவு மீதான உங்கள் காதல்,வெறி,உறுதி,இருந்தால் இந்த உலகமே உங்களிடம் நீங்க விரும்பியதை உங்களிடம் கொண்டு வந்து சேர்த்துவிடும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை வையுங்கள்.

உங்களுக்கு சாதகமாக இல்லாம பின்னுக்கு தள்ள எத்தனிக்கும் எவராக இருந்தாலும் அவர்களின் அனேக கேள்விகளுக்கு இன்று நீங்கள் பதில் சொல்லாது உங்கள் லட்சியத்தில் வாழுங்கள்.

உங்கள் வெற்றி அவர்களுக்கு நாளை பதில் சொல்லட்டும்

Friday, November 20, 2009

அஜித் ஹிட்ஸ்

Damak Damak Damak
Damak Damak Damak
Damak Damakkadu Dama
Naan Thillalengadi aama

Manam thudikithu amma

Oru aatam podhalama

Damak Damakkudu dama

En joli jail dama

Balam irukudamma

Podhu panamum serudu amma

Anubavida endren endren naan

Andavanum thaandan

Eduthikada indre indre endru

Aadavanum vandan

Verum sir’um sir raasa vandu leysa paada

Damak Damakkadu Dama

Naan Thillalengadi aama

Manam thudikithu amma

Oru aatam podhalama

Damak Damakkudu dama

En joli jail dama

Balam irukudamma

Podhu panamum serudu amma

Lalalala heheheh ohohohoho lalalala hey

Netrenbadhu mudinthadu nilaivinil illai

Naan nalaiku nadapathu ninaipadillai

Indru enbadu thaviravum edhuvum illai

Un adhinaan idayatil kavalai illai

Vattam pottu nee valvadarku

Vazhkai enna ganidama

Ellai thaandi nee adi paadu

Yeduvum illai punidama

Nenjil illai bayam bayam

Neram vandal jeyam jeyam

Damak Damakkadu Dama

Naan Thillalengadi aama

Manam thudikithu amma

Oru aatam podhalama

Damak Damakkudu dama

En joli jail dama

Balam irukudamma

Podhu panamum serudu amma

Ellorukum jeyikira kaalam varum

Unkuda thaan bhoomiye kidandu varum

Un paadaiyil ayiram virupam varum

Nilamalai odhidu eelaku varum

Vaanam mele ye bhoomi kile

Vaasalin aakal naduvinile

Kolil mele vaanam illai

Pudithavan nadapan kadalile

Thirumbi paaru dhinam dhinam Thirukku nooru sugam sugam

Damak Damakkadu Dama

Naan Thillalengadi aama

Manam thudikithu amma

Oru aatam podhalama

Damak Damakkudu dama

En joli jail dama

Balam irukudamma

Podhu panamum serudu amma

Anubavida endren endren naan

Andavanum thaandan

Eduthikada indre indre endru

Aadavanum vandan

Verum sir’um sir raasa vandu leysa paada